கொரோனா தொற்றால் ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ள கால்பந்து உலகம் – பிபா தகவல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏறக்குறைய 6 மாதங்கள் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகள் சீர்குலைந்து போயின. படிப்படியாக கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்டாலும் ரசிகர்கள் இன்றி வெறும் காலியாகவே விளையாட்டு அரங்கம் உள்ளது மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமம் மூலம் வரும் வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த இழப்பு சர்வதேச கால்பந்து அமைப்பில் உறுப்பினராக உள்ள 211 நாடுகளுக்கு உட்பட்டது. பொதுவாக கிளப் போட்டிகளின் மூலம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் புரளும். கொரோனா தாக்கத்தால் ஐரோப்பிய கிளப்புகள் தான் பெரும் இழப்பை சந்தித்து இருக்கின்றன என்று சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) கொரோனா நிவாரண திட்டத்திற்கான கமிட்டியின் சேர்மன் ஆலி ரென் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் ஏற்கனவே 150 க்கும் மேற்பட்ட கால்பந்து சங்கங்களை கால்பந்தின் ஆளும் குழுவால் அமைக்கப்பட்ட 1.5 பில்லியன் டாலர் அவசர நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி பெற வழிவகுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top