உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்தது

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி அணைத்து நாடுகளிலும் பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 90ஆயிரத்து 123 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.

கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் அளவிற்கு பெரிய வலுவான மருத்துவ கட்டமைப்பு இந்தியாவில் இல்லை. மேலும், கடந்த சில ஆண்டுகளாக இந்திய மருத்துவக்கட்டமைப்புக்கு போதிய நீதி ஒதுக்கப்படாததும் முக்கிய காரணமாகும்.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 25 ஆயிரத்து 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகளில் அமெரிக்காவில் 68,27,791 பேர் பாதிக்கப்பட்டு முதல் இடத்தில உள்ளது, 50,20,360 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, பிரேசில் 44,21,686 பேர் பாதிக்கப்பட்டு மூன்றாவது இடத்தில உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top