மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள கட்சி பாஜக தான்.  மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவில் மாநில முதல்வர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பாதிக்கப்படும் நிலையும் இருந்து வருகிறது.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

ஒடிசா, அசாம், உத்தரப் பிரதேசம், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாக மீண்டுள்ளனர். சிலர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இந்தநிலையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு இவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘நான் உடல் பலவீனமாக உணர்ந்ததை தொடர்ந்து வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவரை அணுகினேன். கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனைவரின் ஆசிகளுடன் நான் ஆரோக்கியமாக உள்ளேன். இருப்பினும் பிறரது பாதுகாப்புக்காக, நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top