பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா;தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா தொற்று ஏற்பட்டால் கோமியம் என்கிற பசு மாட்டு மூத்திரத்தை குடித்தால் சரியாகி விடும் என்று மக்களுக்கு அறிவுறித்திய பாஜகவினர் தங்கள் தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மட்டும் அவ்வாறு சொல்லாமல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா தொற்றால் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில் கூறுகையில், 

நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். எனது கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்களால் மிக விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவேன். நான் விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்.என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top