வத்தலக்குண்டுவில் புனித சவேரியார் தேவாலயம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே, கிறிஸ்தவ புனித சவேரியார் தேவாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மேலக்கோயில்பட்டி கிராமத்தில் புனித சவேரியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று இரவு 8.30 மணிக்கு பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஆலயத்தின் வெளிச்சுவரில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர். வெடிச்சத்தம் கேட்டு பிரார்த்தனையில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். சுவரில் பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் கருப்பு படிந்துள்ளது.

மேலும், அருகே உடைந்த பாட்டில் கிடந்தது. இது குறித்த தகவலின்பேரில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பவுலோஸ், நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விபட்ட கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேவாலயத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதுடன், வெடிகுண்டு வீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top