தமிழகத்தில் உயிரிழப்பு குறைகிறது; இன்று புதிதாக 5,697 பேருக்குக் கொரோனா தொற்று; 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா உயிரிழப்பு குறைந்து வருகிறது இன்று 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில்5,697 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை 5,14,208. சென்னையில் மட்டும் 1,50,572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

சென்னையில் 989 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,708 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 65 அரசு ஆய்வகங்கள், 105 தனியார் ஆய்வகங்கள் என 170 ஆய்வகங்கள் உள்ளன.

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,806.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 60,48,832.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 80,623.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 5,14,208.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,697.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 989.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 3,09,838 பேர். பெண்கள் 2,04,341 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,484 பேர். பெண்கள் 2,213 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,735 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,58,900 பேர் .

* இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

* 28 பேர் தனியார் மருத்துவமனையிலும், 40 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 8,502 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 3,004 பேர் உயிரிழந்துள்ளனர்.

*இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 10 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன.

நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 60 பேரும் எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்”என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top