“இந்தி தெரியாது போடா” டி-சர்ட் அணிந்த மேலும் ஒரு தமிழ் நடிகை

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு தொடர்ந்து பலிகள் வழியாகவும், புதிய கல்விக்கொள்கை வழியாகவும் இந்தி திணிப்பை இந்தியா முழுவதும் உள்ள பிறமொழி மாநிலங்களில் மீது திணித்து வருகிறது. பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக அரசியல் காட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் சூழலில் தமிழ் மக்களும் இந்தி திணிப்பை எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் இந்தி திணிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் ’இந்தி தெரியாது போடா ’மற்றும் ’I am a தமிழ் பேசும் இந்தியன்’ ஆகிய வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்டுகளை அணிந்து தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர், இந்த நடவடிக்கை இந்தி ஆதரிக்கும் நபர்களுக்கும் திணிப்பவர்களுக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. ’இந்தி தெரியாது போடா’ ஹேஷ்டேக் வடமாநிலங்களில் பரவி பின் இந்தி திணிப்பை உணர்ந்த பிற மொழி மாநில மக்களும் இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது தமிழ் நடிகைகளில் ஒருவரான சாந்தினி தமிழரசன் ’இந்தி தெரியாது போடா’ என்ற டிசர்ட் அணிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சாந்தனு நடித்த ‘சித்து+2’ என்ற படத்தில் அறிமுகமான சாந்தினி தமிழரசன், அதன்பின் ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘பில்லா பாண்டி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top