எம்எஸ் டோனி செய்ததை போன்று போட்டியை பினிஷ் செய்ய விரும்புகிறேன்: டேவிட் மில்லர்

தென்ஆப்பிரிக்கா அணியின் இடது கை அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர். இவர் கடந்த 8 ஆண்டுகளாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 2013ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் அவர் வெளிப்படுத்திய ஆட்டம் எதிர் அணியின் பந்துவீச்சாளர்களை நிலைகுலையவைத்தது. அந்த தொடரில் 418 ரன்கள் குவித்து 164.56 ஸ்ட்ரைக் ரேட் உடன் முன்னிலையில் இருந்தார். அதற்கு அடுத்த தொடர்களில் 446 ருங்கள் குவித்து 149.16 ஸ்ட்ரைக் ரேட் உடன் இருந்தார். அன்றிலிருந்து அவரால் அந்த வரம்பில் பேட்டிங் செய்ய முடியவில்லை.

இந்நிலையில், எம்.எஸ். டோனி சிறந்த பினிஷராக இருப்பதுபோல் தானும் இருக்க விரும்புகிறேன் என்று டேவிட் மில்லர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

டேவிட் மில்லர் இதுகுறித்து கூறுகையில் ‘‘டோனி அவரது வேலையை எப்படி செய்து முடிக்கிறாரோ அதே வழியில் நானும் செல்ல விரும்புகிறேன். அவர் அமைதியாக இருப்பது, அவர் எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார் என்று நினைக்க தோன்றோம்.

அவர் தன்னை சித்திரிக்கும் விதம், மிகவும் சிறந்தது. அவரைப் போன்று நானும் விரும்பி செயல்படுவேன். அதே எனர்ஜியை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். டோனி அவருடைய பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து வைத்து அதற்கு ஏற்ப செயல்படுகிறார். நானும் அதை செய்வேன். அவரைப்போன்று பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை விட, அவரின் சில சேஸிங்கை கண்டு வியப்படைகிறேன். அவரைப் போன்று போட்டியை பினிஷ் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.’’ என்றார்.

2017 மற்றும் 2018 ஐ.பி.எல் தொடர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக டேவிட் மில்லர் வெறும் 8 போட்டிகளில் மட்டுமே விளையாடினர் மற்றும் 2019ம் ஆண்டு வெறும் 10 போட்டிகளில் மட்டுமே விளையாடினர் அதில் 213 ரன்கள் மட்டுமே குவித்தார் 129.87 ஸ்டரைக் ரேட் உடன் இருந்தார். தற்போது இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top