உலகில் அதிவேகமாக கொரோனா பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை

கொரோனா தொற்று வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகநாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 92 ஆயிரத்து 71 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவரமுடடியாமல் இந்திய அரசு திணறிவருகிறது.

அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 37 ஆயிரத்து 788 பேருக்கும், பிரேசிலில் 19 ஆயிரத்து 89 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 94 லட்சத்து 33 ஆயிரத்து 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 72 லட்சத்து 36 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 676 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடைமுறைகளில் பல சவால்களும் குழப்பங்களும் நீடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – 67,48,858, இந்தியா – 48,46,428, பிரேசில் – 43,49,544, ரஷியா – 10,68,320, பெரு – 7,33,860, கொலம்பியா – 7,21,892, மெக்சிகோ – 6,68,381, தென் ஆப்பிரிக்கா – 6,50,749, ஸ்பெயின் – 5,93,730, அர்ஜெண்டினா – 5,65,446


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top