விஜய்சேதுபதியின் “மாமனிதன்” படம் OTT தளத்தில் ரிலீஸாக உள்ளது

நடிகர் விஜய்சேதுபதி அவர்கள் தமிழக மக்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு நடிகர். அவரின் தனித்துவமான நடிப்பு மற்றும் கதை தேர்வு முறைகள் அவரை தமிழ் சினிமாவின் ஒரு முன்னணி நடிகராக மாற்றியுள்ளது. இதன் காரணமாக மக்களின் மனதை வென்ற விஜய்சேதுபதி அவர்களின் படங்களில் “மக்கள் செல்வம்” என்ற கூறுமளவிற்கு வளர்ந்துள்ளார்.

தற்போது வரிசையாக பல படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய்சேதுபதி அவர்களின் படங்கள் ரிலீஸ்க்காக தயாராகி வருகிறது. மாஸ்டர், லாபம், காத்துவாக்குல ரெண்டு காதல், க/பெ. ரணசிங்கம், துக்ளக் தர்பார், மாமனிதன், கடைசிவிவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இதில் க/பெ. ரணசிங்கம் படம் OTT தளத்தில் ரிலீஸாக உள்ளதாக சில நாட்டுகளுக்கு முன் அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தது.

இந்நிலையில், தற்போது அவரின் இனொரு படம் OTT தளத்தில் ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் கசிந்துவருகிறது. இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் நடிகை காயத்திரி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படம் தற்போது OTT தளத்தில் ரிலீஸாக உள்ளது.

மாமனிதன் படத்தை YSR பிலிம்ஸ் மற்றும் கே ப்ரோடுக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் குருசோமசுந்தரம், ஷாஜி சென், ஜெவெல் மேரி போன்றவர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. மானிமைதான் படத்தை Zee5 OTT தளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தது, பேச்சுவார்த்தையில் இந்த படம் Zee5 OTT தளத்தில் ரிலீஸாக உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top