நிறுத்தப்பட்ட ஆக்ஸ்ஃபோர்டு கோவிஷீல்டு பரிசோதனை மீண்டும் தொடங்கியது – ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம்

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசி அமெரிக்கா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் பரிசோதிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது.

கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு, எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதை அடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கோவிஷீல்டு பரிசோதனை பாதுகாப்பானது தான் எனவும், மீண்டும் சோதனைகளை தொடரலாம் எனவும் இங்கிலாந்தின் மருந்தக ஒழுங்குமுறை மேலாணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் மீண்டும் பரிசோதனை தொடங்கப்பட்டிருப்பதாக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top