கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு ஆட்களை தேர்வு செய்யக்கூடாது- மத்திய அரசு சீரம் நிறுவனத்துக்கு உத்தரவு

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, உள்பட பல்வேறு உலகநாடுகள் முயன்றுவருகின்றன.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு.

இதற்கிடையே இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசி அமெரிக்கா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மக்கள் மீது பரிசோதனை நடைமுறைகளை மேற்கொள்ளும் உரிமையை புணேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் பெற்று அதை செயற்படுத்தி வந்தது.

சமீபத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனையில் ஒருவருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியா உள்பட உலகம் முழுவதும் இந்த தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனையை மத்திய அரசிடம் கேட்காமல் மீண்டும் தொடங்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கட்ட பரிசோதனைக்கு தன்னார்வலர்களை தேர்வு செய்வதையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று சீரம் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top