ஜூலையில் இந்திய தொழில்துறை உற்பத்தி 10.4% வீழ்ச்சி: தேசிய புள்ளியியல் அமைச்சகம்

மார்ச் மாதம் கொரோனா காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக அணைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டது. கொரோனா காலங்களுக்கு முன்னரே இந்திய பொருளாதாரம் மிக பெரிய சரிவை சந்தித்தது.

இந்திய பொருளாதாரத்தின் விழிச்சிக்கு மத்திய அரசின் தவறான புரிதல்களும், கொள்கைமுடிவுகள் தான் காரணம் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெரிவித்தது. மேலும், இந்திய பொருளாதார வல்லுனர்களும் இந்த கருத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில், கொரோனா காலங்களில் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க அரசு சில தளர்வுகளை கொண்டுவந்துள்ளது. ஜூலை மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 10.4 விழுக்காடு வீழ்ச்சியை கண்டுள்ளது. தேசிய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை மாதத்தில் உற்பத்தி, சுரங்கம், நுகர்வோர் சார்ந்த பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகள் சரிவை சந்தித்துள்ளன.

இதன்மூலம் தொழில்துறை உற்பத்தி 10.4 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவே முந்தைய மாதங்களான ஜூன் மாதத்தில் தொழில்துறை குறியீடு 16.6 விழுக்காடும், மே மாதத்தில் 33.8 விழுக்காடும், ஏப்ரல் மாதத்தில் 57. 6 விழுக்காடாகவும் வீழ்ச்சி கண்டிருந்தது.

ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் தொழில்துறை உற்பத்தி 29.2 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதுடன், அரசு சில துறைகளில் ஊக்குவிப்புகளை அறிவித்து வருவதால் இனி வரும் மாதங்களில் தொழில்துறை கடுமையான பாதிப்பில் இருந்து மீண்டு வருமா என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top