‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் உடன் இணையும் பகத் பாசில்

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியானபிரேமம்’, தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் ஆகியோரின் நடிப்பால் இப்படம் பெரும் வெற்றியை அடைந்தது.

`பிரேமம்’ படம் மலையாள திரையுலகை தாண்டி பல்வேறு மொழி மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட படமாகும். இப்படம் சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில், தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது: “எனது அடுத்த படத்தின் பெயர் ‘பாட்டு’. பகத் பாசில் ஹீரோவாக நடிக்கிறார். யு.ஜி.எம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இம்முறை நான் இசையமைப்பாளராக மாறியுள்ளேன். இப்படம் மலையாளத்தில் எடுக்கப்படும். படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப குழு பற்றிய விவரத்தை படம் எடுக்கப்படும்போது தெரிவிக்கிறேன்”. என அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய அடுத்த படம் தமிழில் துவங்க இருப்பதாக 2017-ம் ஆண்டு அறிவித்து இருந்தார், ஆனால் சில காரணங்களால் இப்படம் துவங்கப்படாமல் நின்றுபோனது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top