கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது – முக ஸ்டாலின்

திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் வரும் 9ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர்.

பொதுக்குழு கூட்டம் தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று கட்சியின் தலைமையிடமான அறிவாலயம் சென்றார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியதாவது:-

  1. காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முறைபடுத்தியுள்ளோம். இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி வழங்கியுள்ளோம்.
  2. இந்த கூட்டத்தில் ஒன்றிய, நகர செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநில அணிகளின் அமைப்பாளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 500 பேர் கலந்து கொள்கின்றனர்.
  3. அடுத்த ஆண்டு மத்தியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராக உள்ளது. வரும் 9-ம் தேதிக்கு பிறகும் மற்றும் தேர்தல் களத்தில் வரும்போதும் திமுகவின் பலம் தெரியும்.
  4. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு ஏற்கனவே தோல்வியடைந்துள்ளது. இப்போது முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.

என தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top