5 மாதங்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று பஸ் போக்குவரத்து தொடங்கியது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்ட ஊரடங்கு உத்தரவின் போதும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மண்டலங்களில் பஸ் போக்குவரத்து ஜூன் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவியதால், ஜூலை 1-ந் தேதி முதல் அனைத்து பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன.

அதன் பிறகு, கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று அரசு அறிவித்தது.

அதன்படி, தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு பிறகு தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இன்று அதிகாலை முதல் தொடங்கியது.

ஏற்கனவே மாவட்டங்களுக்குள் அரசு பேருந்து சேவை தொடங்கிய நிலையில் மாவட்டங்களுக்கிடையே அரசு பேருந்து, தனியார் பேருந்து சேவை தொடங்கியது.

இதற்காக கோயம்பேடு பணிமனையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பஸ்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத, முகக்கவசம் அணியாத பயணிகள் பேருந்துகளில் ஏற அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top