பிக் பாஸ் தமிழ் சீசன் 4 – களமிறங்கும் 14 போட்டியாளர்கள் முழு லிஸ்ட்

ஹிந்தி சீரியலில் வரும் கலையாத தலை, தூங்கி எழுந்து பின்னரும் மேக்கப், தூங்கும் பொழுதும் மேக்கப் உடன் திரியும் நடிகர், நடிகைகள், அடக்கிவைத்த அடகுகடைபோல் ஆடம்பர வீடுகள் என எந்த விதத்திலும் ரீலிட்டிக்கு சம்மந்தமே இல்லாத சீரியல் தொடர்கள் அங்கு வெற்றிபெற்றுவந்தது.

அதை அப்டியே துளியும் மாற்றாமல் தமிழ் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக காப்பி அடித்து வருகின்றன. இந்த சூழலில் ஹிந்தியில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வெளிவந்து வெற்றிபெற்றது அதை துளியும் மாற்றாமல் அப்படியே தமிழிலும் எடுத்துவருகிறார்கள்.

தமிழக ரசிகர்கள் இடையே சீரியல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றாலும் அதற்கு இணையான எதிர் கருத்துகளையும் பெற்றுத்தான் வருகின்றது.

தமிழ் ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் காத்துகொண்டிருந்த ஒரே நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 4. நடிகர் கமல் ஹாஸன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

மேலும் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 4ன் புரமோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

இதுவரை பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளர்கள் யார் யார் என்றும் எப்போது இந்த நிகழ்ச்சி துவங்கும் என்றும் எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்நிலையில், இந்த 4 செலிபிரிட்டிகள் பங்கேற்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இலக்கியா, ஷிவானி நாராயணன், பூனம் பாஜ்வா, வி ஜே சித்ரா இவர்கள் நான்கு பேர் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ள போகும் 14 போட்டியாளர்களின் பட்டியல் தற்போது வெளியே கசிந்துள்ளது.

 1. அமிர்தா ஐயர் – பிகில் நடிகை
 2. நடிகை கிரண்
 3. நடிகை அதுல்யா ரவி
 4. நகைச்சுவையாளர் புகழ்
 5. சிவாங்கி – சூப்பர் சிங்கர்
 6. ரம்யா பாண்டியன்
 7. பூனம் பஜ்வா
 8. சனம் ஷெட்டி
 9. வி ஜே சித்ரா
 10. அனு மோகன் – நடிகர்
 11. ஷிவானி – சீரியல் நடிகை
 12. மணிமேகலை – தொகுப்பாளினி
 13. காமெடி நடிகை வித்யுலேக்கா
 14. டிக்டாக் இலக்கியா

இந்த பட்டியல் உண்மையானதல்ல, ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top