தமிழகத்தில் இன்று 5,976 பேருக்கு கொரோனா தொற்று; சென்னையில் 992 பேர் பாதிப்பு: 79 பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,976 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று  992 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த  பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 720 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று (செப். 4) கொரோனா தொற்று நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

“தமிழகத்தில் இன்று புதிதாக 5,976 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,604 பேர். பெண்கள் 2,372 பேர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 739 பேர். பெண்கள் 1 லட்சத்து 79 ஆயிரத்து 59 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 20 ஆயிரத்து 506 பேர். 13-60 வயதுடையவர்கள் 3 லட்சத்து 72 ஆயிரத்து 348 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 58 ஆயிரத்து 973 பேர்.

இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 699 பேர். மொத்தமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 51 லட்சத்து 30 ஆயிரத்து 741.

இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 588. மொத்தமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 62 ஆயிரத்து 357.

இன்று மட்டும் தனியார் மருத்துவமனைகளில் 28 பேர், அரசு மருத்துவமனைகளில் 51 பேர் என மொத்தம் 79 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 7,687 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 8 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 71 பேர்கள்

தமிழகத்தில் இன்று 6,334 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 92 ஆயிரத்து 507.

தற்போது வரை 51 ஆயிரத்து 633 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top