இளவரசன் ஹாரி, மேகன் தம்பதியர் நெட் பிளிக்ஸ் உடன் ஒப்பந்தம் – வெப் தொடர்கள் தயாரித்து வழங்க முடிவு

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் ஹாரி, அவரது மனைவி மேகன். ஹாரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டின் அரச கடமைகளில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவர் மனைவி மேகன், குழந்தை ஆர்ச்சியுடன் அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் குடியேறினார்.

இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் தளத்தில் வெப் தொடர்களை தயாரித்து வழங்குவதற்கு பல்லாண்டு கால ஒப்பந்தம் ஒன்றில் ஹாரி, மேகன் தம்பதியர் கையெழுத்திட்டுள்ளனர்.

அவர்கள் ஆவணப்படம், ஆவணப்பட தொடர்கள், படங்கள், ஸ்கிரிப்ட் நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சிகள் என பல வகையான ‘வெப்’தொடர்களை தயாரித்து வழங்குவார்கள் என தெரிய வந்துள்ளது. இதையொட்டி அந்த தம்பதியர் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் கவனமெல்லாம் வழங்க உள்ள தொடர்களின் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் இருக்கும். இது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. புதிய பெற்றோராக உற்சாகமான குடும்ப நிகழ்ச்சிகளை உருவாக்கித்தருவது எங்களுக்கு முக்கியமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.

“முன்புஇல்லாத அளவிற்கு பயனுள்ள உள்ளடக்கத்தை கொண்ட அதிக செயல் மிக்க கருத்துக்களை பகிர எங்களுக்கு நெட்பிளிக்ஸ்” உதவும் என கூறினார்.

ஆனால் நெட்பிளிக்சுடன் ஹாரி, மேகன் தம்பதியர் செய்துள்ள ஒப்பந்தத்தின் மதிப்பு விவரம் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அவர்கள் வாழ்க்கையில் சம்பளம் பெறும் வேலையில் ஈடுபடுவதற்கான மிகப்பெரிய படியாக இது அமையும் என கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி ஹாரி மற்றும் மேகன் இருவரும் கடந்த சில மாதங்களாக ஆப்பிள் மற்றும் டிஸ்னி நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்தனர்.

அதே நேரத்தில் முன்னாள் நடிகையாக இருந்தாலும் மேகன், ஆவணப்பட வெப் தொடர்களில் நடிக விருப்பம் எனவும் மற்ற படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top