வங்கிக் கடனுக்கு ‘EMI’ அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்:உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு

வங்கிகளில் வாங்கிய கடனுக்கு EMI’ கட்டுவதற்கு மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் உச்சநீதிமன்றம் தலையீட்டிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் வரை நிலுவை அவகாசத்தை தந்திருக்கிறது

கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது. வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டு பெரும்பாலான மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் பல பேர் தற்கொலை செய்திருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் ‘EMI’ கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஏப்ரல், மே மாதங்களில் ‘EMI’ கட்ட அவகாசம் வழங்கப்பட்டது. ‘EMI’ கட்ட அவகாசம் வழங்கினாலும், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடைமுறையில் வங்கிகள் இறங்கின.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் மத்திய அரசை கண்டித்ததுடன் பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது EMI அவகாசத்தை 2 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பதில் அளித்தன.

இந்நிலையில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் ரிசர்வ் வங்கியின் நடைமுறை குறித்து நாளை உரிய முடிவு எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top