புது சங்கம்; தமிழ் திரைப்பட நடப்பு சங்கத்துக்கு தலைவர் ஆனார் இயக்குனர் பாரதிராஜா!

பாரதிராஜா தலைமையில் புதிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்க போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. பிறகு வலியோடு புதிய சங்கத்தைத் தொடங்குவதாக பாரதிராஜா அறிவித்தார்.

இதற்கு சில தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். சங்கத்தை உடைக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் தாணு உள்பட பலர் கூறினர். இதனால் இது பரபரப்பானது. அதன்படி தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் இந்த சங்கம் தொடங்கியது. இதன் பொதுக்குழு கூட்டம் ஜூம் வாயிலாக நேற்று நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக டி.சிவா, துணைத்தலைவர்களாக ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, பொருளாளராக டி.ஜி.தியாகராஜன், இணைச்செயலாளர்களாக எஸ்.எஸ்.லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கே.விஜயகுமார் அறிவித்தார்.

நந்தகோபால் (மெட்ராஸ் என்டர்ப்ரைஸஸ்), மதன் (எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்) விஜயகுமார் (திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்), ராஜ்சேகர கற்பூரசுந்தரபாண்டியன் (2D என்டர்டெயின்மென்ட்), டில்லி பாபு (ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி), கார்த்திகேயன் சந்தானம் (ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்), ஆர். கண்ணன் (மசாலா பிக்ஸ்) உள்பட 12 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிர்வாகிகள் இரண்டு வருடம் (29.8.2020 முதல் 28.8.2022 வரை) பொறுப்பில் இருப்பார்கள் என்று இந்த சங்கத்தில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் பணி முழுமையாகவும், திருப்திகரமாகவும் செய்து முடிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி விஜயகுமார் கூறியிருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top