அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை; இரண்டு ஏவுகணைகளை செலுத்தியது!

அமெரிக்காவிற்கு  எச்சரிக்கை விடுத்து தென்சீனக் கடலில் விமானம் தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் 2 ஏவுகணைகளை சீனா ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்சீனக் கடலுக்கு சீனா உரிமை கொண்டாடுவது தொடர்பாக அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இரு நாடுகளுக்கு இடையே உரசல் போக்கு உள்ளது.

சீனாவின் கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவின் உளவு விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி பறந்ததாக சீனா குற்றம்சாட்டியிருந்தது.

இதையடுத்து அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக DF-26B, DF-21D ஆகிய 2 ஏவுகணைகளை சீனா தென்சீனக் கடலில் ஏவியுள்ளது. இதில், DF-21 ஏவுகணை விமானம் தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது எனக் கூறப்படுகிறது.

DF-26B இடைநிலைத்தூர அணுஆயுத ஏவுகணையாகும். இதை குயிங்காய் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது. DF-21D-ஐ ஜிஜியாங் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது. மீடியம்-ரேஞ்ச் அணுஆயுத ஏவுகணை ஆகும்.

தென்சீனக் கடலில் விமானம் தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் 2 ஏவுகணைகளை சீனா ஏவியதால் அப்பகுதி பரபரப்புக்குள்ளானது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top