காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலபேர் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளனர் – ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு!

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளதாக ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றச்சாட்டை வைத்ததற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதைத்தொடர்ந்து, அவரது தாயார் சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற காரிய கமிட்டி இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை சோனியா காந்தி தொடர வேண்டும் என காரிய கமிட்டி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். கூட்டத்தில் பேசிய சோனியாகாந்தி காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள்; இடைக்கால தலைவராக தொடர விருப்பம் இல்லை என பேசியதாக தகவல் வெளியானது. 

இதனைத்தொடர்ந்து காங்கிரசில் தலைமை மாற்றம் குறித்து செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். அப்போது சில காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதை கூறியிருந்தார்

இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதை ராகுல்காந்தி நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.. மேலும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறோம் எனக் கூறுவதா? என்று கபில் சிபலும் ராகுலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top