தமிழக மீனவர்களுக்கு எதிராக கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்ற கூட்டத்தில் எச்சரிக்கை!

வெளிநாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பகுதில் அத்துமீறி நுழைய கூடாது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்ற கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்ற பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் தொழில் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு தடை விதித்து, உள்நாட்டு மீன்களை சந்தைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், உரிய அனுமதி இல்லாமல் இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்களை மனதில் வைத்தே “இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக மீனவர்களுக்கு எதிராக பேசி இருக்கிறார். தமிழக எல்லையில் மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படை இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடித்ததாக கைது செய்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு இதை பெரிய விசயமாக எடுத்துக்கொள்வதில்லை.

இந்நிலையில் பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றதும்  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே எச்சரிக்கை விடுத்துள்ளது .

தமிழக மீனவர்களுக்கு எதிராக அமைந்து இருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top