அமெரிக்கர்களின் 3,80,000 வீடியோக்களை நீக்கியது – டிக்டாக் நிறுவனத்தின் அதிரடி

தென்சீன கடல் விவகாரம், உலக வர்த்தகப்போர் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. இரு நாடுகளும் உலகம் முழுக்க உள்ள இடங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட புவிசார் அரசியல் போரை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் நெருக்கடியால் சீன செயலிகளுக்கு பல்வேறு நாடுகள் தடை வித்துவருகிறது. சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டாக் உள்பட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த மாதம் தடை விதித்தது. இதை தொடர்ந்து டிக்டாக் செயலியை தங்கள் நாட்டிலும் தடை விதிக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிக்டாக் செயலி, அதைப் பயன்படுத்துவோரின் விவரங்களை தானாகவே அபகரித்துக்கொள்கிறது என்று அமெரிக்கா சீன அரசை குற்றம்சாட்டியது,

இதன் காரணமாக டிக்டாக் செயலிக்கு தடைவிதித்து உத்தரவிடுகிறேன் என இந்த மாத தொடக்கத்தில் டிரம்ப் கூறினார். இந்த தடை உத்தரவு அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் அமெரிக்காவில், ட்ரம்பின் நிறவெறி அரசியலை

தனது நிறுவனத்தின் வெறுப்பு பேச்சு கொள்கையை மீறும் வகையிலான 3,80,000 வீடியோக்களை இந்த ஆண்டு டிக்டாக் நிறுவனம் நீக்கியுள்ளது.

இனவெறி அடிப்படையிலான துன்புறுத்தல்களை கொண்ட மற்றும் அடிமைத்தனம் போன்ற விசயங்களை உள்ளடக்கிய பதிவுகள் தங்களது நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் விசயங்களாகும். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கட்டமைக்கப்பட்ட குழுக்களுக்கு அனுமதி இல்லை என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை வெளியிட்டதற்காக 1,300 கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top