கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களை குறித்த தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில், மூத்த அரசியல் தலைவர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழகத்தின் சமுக மாற்றத்திற்கு போராடிய இரா நல்லகண்ணு நேற்று (20.08.2020) இரவு சளி, காய்ச்சல் அறிகுறிகள் லேசாக தென்பட்டதின் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். கட்சியினர் மற்றும் நண்பர்கள், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் பார்த்தும் நலம் விசாரிக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

94 வயதாகும் நல்லகண்ணு அவர்கள் தற்போது சென்னையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top