கோவை மாநகராட்சி பள்ளிகளில் மும்மொழி;இந்தி திணிப்பு! தமிழக அரசு மறைமுக ஆதரவா?

கோவை மாநகராட்சி பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்திருக்கிறது

“இந்தியாவிலோ முதலாளிகளுக்கு தேவையான கூலியாட்களை உருவாக்கும் ஒரு கல்விமுறையை புதிய கல்விக்கொள்கை 2020 என்ற பெயரில் மத்திய மோடி அரசு உருவாக்கியிருக்கிறது”.என்று தமிழகத்திலிருந்து புதிய கல்விக்கொள்கைக்கு ஆளும்கட்சி உட்பட எதிர்ப்பு தெரிவித்து வருவது அறிந்ததே

இந்நிலையில், 3வது மொழியாக இந்தி, சமஸ்கிருதம் படிக்க விருப்பமா என கேள்விக் கேட்டு விண்ணப்ப படிவம் கோவை மாநகராட்சி பள்ளியில் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது .தமிழக அரசே இருமொழி கொள்கைதான் என்று கூறிய பிறகும் இப்படி நடக்கிறதென்றால்.கோவையில்  மட்டும் பாஜக கொள்கைகளை நடைமுறைப்படுத்த அனுமதி அளித்திருக்கிறதா தமிழக அதிமுக அரசு   

“இந்த புதிய கல்விக்கொள்கையில் கட்டாயமாக குழந்தை பருவத்திலிருந்தே இந்தியும், சமஸ்கிருதத்தையும் திணித்து தமிழ்,கன்னடம்,மராத்தி,தெலுங்கு உள்ளிட்ட தேசிய இன மொழிகளை அழிக்கும் வேலை நடக்கிறது. இதன் உச்சகட்டமாக குழந்தைகளுக்கு கல்வியை கொடுக்காமல் பள்ளிக்கூடத்திலிருந்து அவர்களை விரட்டி அவர்கள் பெற்றோர்கள் செய்த வேலையை அதாவது குலக்கல்வியை ஊக்கப்படுத்தும் கொடூரமும் கல்விக்கொள்கை என்ற பெயரில் நடக்கிறது.

இப்படிப்பட்ட மோசாமன ஒரு கொள்கையை கொண்ட கல்வியை இந்திய ஒன்றியத்தில் அமுல்படுத்தக்கூடாது என்று நாடெங்குமிருக்கிற கல்வியாளர்கள்,மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள், ஆசியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்த்து வருகிறார்கள்.

தமிழகம் இந்த எதிர்ப்பில் முன்னோடியாக இருக்கிறது. இதனால் தமிழக முதல்வர் மும்மொழிக்கொள்கையை ஏற்கமாட்டோமென்று அறிவித்தார்.

ஏற்கனவே புதிய கல்விக்கொள்கையில் உள்ள ஒவ்வொரு சரத்துகளாக தமிழகத்தில் சத்தமின்றி நிறைவேற்றப்பட்டு வருகின்றன, உதாரணமாக 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, காலைஉணவு திட்டத்தில் இஷ்கான் போன்ற குறிப்பிட்ட மதத்தை பரப்பும் தொண்டு நிறுவனங்கள், கிராமப்புற பள்ளிகளை ஒன்றாக இணைப்பது இப்படி நடந்து கொண்டிருக்கும் சூழலில், கோவை மாநாகராட்சி அரசு பள்ளியில் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான படிவத்தில் ’இந்தியையும், குலக்கல்வியை சத்தமின்றி அறிமுகப்படுத்தும் வேலைகள் நடந்திருப்பது வேதனையளிக்கிறது” என்று மே பதினேழு இயக்கம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது  

தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் விரும்புகிறார்கள் அரசு செய்யுமா?


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top