ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்ஸ்சரை வென்ற “ட்ரீம் 11” பின் சீன நிறுவனம்;

உலகளவில் ஐ.பி.எல். போட்டிகளுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதன்காரணமாக, அந்தப் போட்டிகளின்போது விளம்பரம் செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் பல போட்டிபோட்டு கொண்டு வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை, அதாவது 5 வருடம் வரையிலான டைட்டில் ஸ்பான்சரை 2,200 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் விவோ நிறுவனம் கைப்பற்றியிருந்தது.

லடாக் எல்லை மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் சீனா ராணுவத்தினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்த விவகாரத்தில், இருநாட்டு உறவில் சிக்கல் நீடித்து வருகிறது.

இதன் காரணமாக மக்கள் சீன பொருட்களை புறக்கணித்து வந்தனர். இந்தியா அரசின் மாட்டியுடனும், இந்தியா தொழில் அதிபர்களின் கீழ் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சீனாவின் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரை வைத்து இருப்பது மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து ‘BoycottIPL’ ஹேஸ்டேக் உருவாக்கி ஐபிஎல் மற்றும் பிசிசிஐ மீது ட்விட்டரில் மக்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

இதன் எதிரொலியாக ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகுவதாக சீனாவின் விவோ நிறுவனம் அறிவித்தது. அதனையடுத்து, டைட்டில் ஸ்பான்சராக எந்த நிறுவனம் வரும் என்ற கேள்வி எழுந்துவந்தது.

இந்தநிலையில் பி.சி.சி.ஐ நடத்திய ஏலத்தில் ஐ.பி.எல். டைட்டில் ஸ்பான்சரை ட்ரீம் லெவன் 222 கோடி ரூபாய்க்கு வென்றுள்ளது. இந்த டைட்டில் ஸ்பான்சர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிவரை ட்ரீம் லெவன் நிறுவனத்திடம் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். டாடா நிறுவனம் 180 கோடி ரூபாய்க்கும், பைஜூஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய்க்கும் ஏலம் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் ட்ரீம் லெவன் நிறுவனமும் சீன நிறுவனங்களுடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது. சீன இணையதள நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ட்ரீம் லெவன் நிறுவனத்தின் நிதி ஆதரவாளர்களில் ஒன்று என்று தெரிய வந்துள்ளது. இது தெரிந்தும் பி.சி.சி.ஐ தொடர்ந்து ட்ரீம் லெவன் இந்திய நிறுவனம் என்று கூறிவருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top