ஊரடங்கில் லாபத்தில் இயங்கிய ஒரே துறை காவல்துறை! தமிழகத்தில் ரூ.20.69 கோடி அபராதம் வசூல்!

ஊரடங்கு மீறல் காரணமாக தமிழகத்தில் இதுவரை ரூ.20.69 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை பெருமையாக தெரிவித்துள்ளது.வருத்தம் அளிக்கிறது

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் திடீர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இதுவரை  தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இந்நிலையில்  தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊரடங்கு மீறல் காரணமாக தமிழகத்தில் இதுவரை ரூ.20.69 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்து உள்ளது

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 9,73,576 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,85,415 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8,81,434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.என்று அறிக்கையில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் மக்களுக்கு வேலை இல்லாமல், சேமிப்பும் இல்லாமல் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில் ஏதாவது வேலை கிடைக்கும்போது வெளியே வந்து வேலைக்கு போனவர்களை போலீஸ் மறித்து ஊரடங்கு சட்டத்தை மீறியதாக வழக்கு பதிவு செய்தது.சென்ற வண்டியை பிடுங்கியது, ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு உணவு வாங்க சென்றவர்களையும் கைது செய்யாத குறையாக வழக்கு பதிவு செய்து தண்டம் கட்டச்சொன்னது போலீஸ்.இப்படியாக வசூலித்த பணம் இருபது கோடி! இவையெல்லாம் பசியில் வாடிய மக்களிடமிருந்து பிடுங்கிய பணமல்லவா? இதில் என்ன பெருமை இருக்கிறது இந்த அரசுக்கு!

கொரோனா பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக போலீஸ் மூலமாக பெரும் அச்சத்தை தரவைத்தது தமிழக அரசு.அந்த அச்சத்தின் காரணமாகதான் இறந்த மருத்துவரைக் கூட நல்லடக்கம் பண்ண முடியாத சூழலை உருவாக்கியது இந்த அரசு.  

உணவின்றி ,வேலையின்றி வாடும் மக்களிடமிருந்து ரூ.20.69 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று சொல்லுவது இந்த அரசின் மக்கள் விரோத செயல்பாட்டையே தெரிவிக்கிறது!


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top