மகேந்திர சிங் தோனி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முன்னாள் கேப்டன் எம்.எஸ். மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு இரண்டாவது முறையாக உலக கோப்பையை வாங்கித்தந்த மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

கடந்த 2014-ம் ஆண்டு இறுதியிலேயே தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து  முழுமையாக ஓய்வு பெற்றுள்ளார்.

 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில்  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அவர் ஆட்டமிழந்தும் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. குப்திலின் துல்லியமான த்ரோவில் அவர் ஆட்டமிழந்தார். இதுவே அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அமைந்துவிட்டது. 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று 19.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாகக் கருதிக் கொள்ளுங்கள்,” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top