பரபரப்பான சூழல்!மூத்த அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் அவசரஆலோசனை;துணை முதல்வரை சந்தித்தனர்!

சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசரமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.பிறகு, துணை முதல்அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்தனர்.  

சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி, சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது  அரசியல் விமர்சகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அமைச்சர் ஜெயக்குமார் அறையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

.அமைச்சர் ஜெயக்குமார் அறையில் 10- க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இல்லத்திற்கு மூத்த அமைச்சர்கள் சென்றனர். துணை முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். துணை முதல்வரை சந்தித்த பின் முதல் அமைச்சரை அமைச்சர்கள் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி விட்டு  துணை முதல்வரை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top