கொரோனா தொற்று; பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்!

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன் குடும்பத்தினர், இயக்குனர் ராஜமவுலி, நடிகர் விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா என பலர் பாதிக்கப்பட்டனர். அந்தவகையில் பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

தனக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததாகவும், கொரோனா பரிசோதனை முடிவில் பாசிடிவ் என வந்தது என்றும் பயப்படும் படியாக இல்லை என்றும் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். 

பின்னர், கொரோனா தொற்றுக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top