கொரோனா தேனாம்பேட்டை மண்டலத்தில் அதிகமான உயிரிழப்புகள்- சென்னை மாநகராட்சி

சென்னையில் கொரோனாவின் தாக்கம் கடந்த ஜூலை மாதம் வரை அதிகமாக இருந்தது. தற்போது கொரோனா தொற்று சற்று தணிந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 8-ல் இருந்து 6 சதவீதமாக குறையும் என்று சென்னை மாநகராட்சி ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அந்தவகையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. இதுவரை 88 சதவீதம் பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

வடசென்னை மக்களின் ஒத்துழைப்பால் அங்கு கொரோனா தொற்று பரவல் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு உயிர் இழப்புகளும் குறைக்கப்பட்டது.

11 ஆயிரம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இறப்பு விகிதத்தை பொறுத்தவரை சென்னையில் 2.11 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 350-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக தண்டையார்பேட்டை, அண்ணாநகர் மண்டலங்களில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது 0.8 சதவீதமாக உள்ளது. இதுவரை ஆண்கள் 59.06 சதவீதம் பேரும், பெண்கள் 40.94 சதவீதம் பேரும் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top