ஒரே மேடையில் பிரதமரோடு இருந்த ராமர் கோவில் அறங்காவலர் குழு தலைவருக்கு கொரோனா தொற்று!

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் ஒரே மேடையில் பிரதமரோடு கலந்துகொண்ட  ராமர் கோவில் அறங்காவலர் குழு தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இந்தியாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.  மக்கள் கொத்துக் கொத்தாக செத்துக்கொண்டிருக்கிறார்கள் இதை பற்றி எந்தவிதமான கவலையும் கொள்ளாமல், இந்தியப் பிரதமர் மோடி உத்திரபிரதேசத்தில் கடந்த ஐந்தாம் தேதி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

கொரோனா தொற்று ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கையில் அதையும் மீறி உபி அரசு இந்த விழாவை நடத்தியது.இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி பிரதமர் இந்த விழாவில் கலந்துகொண்டார்

இந்நிலையில்,அந்த விழாவில் கலந்துகொண்ட  ராமர் கோவில் அறங்காவலர் குழு தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர் முக கவசம் அணியாமல் விழாவில் கலந்துகொண்டது தெரியவந்துள்ளது

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட ராமர் கோவில் அறங்காவல் குழு தலைவர் மஹாந்த் நித்ய கோபால் தாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அயோத்தியில் கடந்த வாரம் ராமஜென்ம பூமியில் நடைபெற்ற பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் கோபால் தாஸ் பங்கேற்று இருந்தார். 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மஹாந்த் நித்ய கோபால் தாஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பிரதமர் மோடியுடன் கொரோனா தொற்றுக்கொண்ட கோபால் தாஸ் முககவசம் அணியாமல் ஒரே மேடையில் அமர்ந்து இருந்ததால் பிரதமருக்கும் உடனடியாக டெஸ்ட் எடுக்கவேண்டும் என்கிற குரல் கட்சிக்குள் ஒலித்துக்கொண்டு இருக்கிறது  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top