முதல்வர் வேட்பாளர் யார்? அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை!

சமீபகாலமாக அதிமுகவில் எரிந்துக்கொண்டிருக்கும் பிரச்சனை வருகிற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற கேள்விதான். இதற்கிடையே ,பாஜக கட்சினர் அதிமுகவை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் வருகிற தேர்தலில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் போட்டி என பத்தவைத்துவிட்டார்கள்.

இந்நிலையில்,வருகிற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் ?என்கிற வாதத்திற்கு முற்றுபுள்ளி வைக்க அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கடந்த சில தினங்களாக  அமைச்சர்கள் சிலர் மாறுபட்ட கருத்துக்களை கூறியது அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனையில், கேபி முனுசாமி, சிவி சண்முகம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். 

வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக  தமிழக பாஜக தலைவர்கள் சிலர் கூறிய கருத்தும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது .இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top