முப்படைதளபதி பிபின்ராவத் பேட்டி;“எதையும் எதிர்கொள்ளத் தயார்”–இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம்!

இந்தியா-சீனா எல்லை பிரச்சனை தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்துக்கொண்டிருந்தாலும் உண்மை நிலவரத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு மறைத்தே வந்தது.

இன்று முப்படைகள் தளபதி பிபின் ராவத் பேட்டியின் மூலம் இந்தியா-சீனா எல்லை பிரச்சனையில்  இந்திய வியூகம் தோல்வியடைந்து இருப்பது தெரிய வருகிறது

இன்று முப்படைகள் தளபதி பிபின் ராவத் பேட்டியில் இந்தியா-சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு, இரு நாட்டுக்கும் இடையிலான உறவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா-சீனா இடையிலான பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதே நேரத்தில் எத்தகைய நடவடிக்கையையும் எதிர்க்கொள்ளத் தேவையான நடவடிக்கையை எடுக்கப்பட்டு உள்ளதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்திய, சீன எல்லையில் தொடரும் ஊடுருவலை எதிர்கொள்ள நீண்டக்கால அடிப்படையில் எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாராக உள்ளதாகவும் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

ராணுவ ரீதியில் 5 முறையும், தூதரக ரீதியில் 3 முறையும் பேச்சு நடைபெற்ற நிலையிலும், இருநாடுகள் இடையிலான உரசல் நீடித்து வரும் நிலையில், முப்படைகளின் தயார் நிலை குறித்து பொது கணக்கு குழுவிடம் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top