இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் – சிறு, குறு தொழில் அமைப்புகள்

தமிழநாட்டில் சரியான காரணங்களையும், ஆவணங்களையும் காட்டி முறையாக விண்ணப்பித்தவர்களால் இ பாஸ் பெற இயலாத நிலையில், புரோக்கர்கள் மூலம் 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று அதிகாரிகள், இ பாஸ்கள் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டனர்.

மேலும், கொரோனா காலத்திலும், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் அரசு ஊழியர்களுக்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்..

இதை தொடர்ந்து, நேற்று கோவையை சேர்ந்த சிறு, குறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் தொழில் விஷயமாக வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் இ-பாஸ் முறையாக வழங்கப்படுவது இல்லை. ரெயில், பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளதால் வெளிமாவட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வருவது தடைபட்டுள்ளது. எனவே வேலை மற்றும் தொழில் காரணமாக பிற மாவட்டங்களுக்கு சென்று வர இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top