உலகில் முதல் கொரோனா தடுப்பூசி; தனது மகளுக்கே போட்டு ரஷ்யா அதிபர் நம்பிக்கையை உருவாக்கினார்

ரஷியாவில் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு. ரஷ்ய அதிபர் தனது சொந்த மகளுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனையை அதிபர் தொடங்கி வைத்துள்ளார்.

உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா கண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 மாதங்களாக உலக நாடுகளை புரட்டி எடுத்து வருகிற கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் மக்களை பெரும் கொடிய தொற்றுக்கு ஆளாக்கி வருகிறது. ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தினம், தினம் ஆயிரக்கணக்கில் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் இந்த வாரத்துக்குள் உலக அளவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை எட்டும் என உலக சுகாதார அமைப்பு கணித்தது. ஆனால், கொரோனா பாதிப்பு நேற்று 2 கோடியை தாண்டியது. பலி எண்ணிக்கையும் 7 லட்சத்து 50 ஆயிரத்தை மிஞ்சும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறினார்.

இந்நிலையில் ரஷியாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி பரிசோதனை தொடங்கி உள்ளது. தனது சொந்த மகளுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனையை அதிபர் புதின் தொடங்கி வைத்துள்ளார்.இது பொது மக்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது

கொரோனாவுக்கான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அதிபர் புதின் பெருமிதத்தோடு  தெரிவித்துள்ளார். உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா கண்டு பிடித்தது. அதிபர் புதின் மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யா, அதன் மருத்துவ சோதனையை ஜூன் 18 அன்று தொடங்கியது 38 தன்னார்வலர்களுக்கு பரிசோதித்தது. . அனைத்து பங்கேற்பாளர்களும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாக கூறியது.. தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் குழுவினர் ஜூலை 15 ம் தேதியும், இரண்டாவது குழுவினர் ஜூலை 20 ம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதையடுத்து ஆய்வுகள் தொடர்ந்த ரஷ்யா, உலகின் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்ய விரும்பியது. இதை கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஊடகங்களிடம் அந்நாட்டு சுகாதார இணையமைச்சர் ஒலெக் கிரிட்னேவ் அறிவித்து இருந்தார்.

இதன்படி ரஷ்ய அதிபர் புடின் முதல் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்தார். இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்து வைத்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த புடின் , உடல் நிலை சரியில்லாமல் உள்ள தனது இரண்டு மகள்களில் ஒருவருக்கு இத்தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறினார்.

தடுப்பூசிகள் பதிவுசெய்யப்பட்ட பின்னர் காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரஷ்யர்களில் 60% வரை காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் என்று சுகாதார இணையமைச்சர் ஒலெக் கிரிட்னேவ் முன்பு கூறியிருந்தார்.

அக்டோபரில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படலாம் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகம் முன்னர் கூறியிருந்தது. சுகாதார அமைச்சர் முராஷ்கோ மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார குழுவினருக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறியிருந்தார். எனவே இன்று முதல் சோதனை முறையில் தடுப்பூசி போடப்படுகிறது.

மாஸ்கோவில் உள்ள ஹேமாலயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து சாதனை படைத்துள்ளது. செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top