தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு;இன்று 118 பேர் உயிரிழந்தனர்; 5,834 பேருக்குக் தொற்று!

தமிழகத்தை விட அதிக மக்கள் தொகை கொண்ட மற்ற மாநிலங்களில் இல்லாத உயிரிழப்பு தமிழகத்தில் அதிகமாவதுஏன்?இன்று கொரோனாவால் 118 பேர் உயிரிழந்துள்ளனர்!  

தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5 834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது. 118 பேர் உயிரிழந்துள்ளனர்!  

சென்னையில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 3,08,649-ல் சென்னையில் மட்டும் 1,11,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,50,680 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 20 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,48,747.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,848 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அரியலூர் – 86

செங்கல்பட்டு – 388

சென்னை – 986

கோவை – 324

கடலூர் – 281

தர்மபுரி – 8

திண்டுக்கல் – 150

ஈரோடு – 17

கள்ளக்குறிச்சி – 74

காஞ்சிபுரம் – 330

கன்னியாகுமரி – 192

கரூர் – 31

கிருஷ்ணகிரி – 43

மதுரை – 90

நாகை – 53

நாமக்கல் – 10

நீலகிரி – 5

பெரம்பலூர் – 35

புதுக்கோட்டை – 64

ராமநாதபுரம் – 36

ராணிப்பேட்டை – 333

சேலம் – 206

சிவகங்கை – 55

தென்காசி – 136

தஞ்சாவூர் – 125

தேனி – 297

திருப்பத்தூர் – 37

திருவள்ளூர் – 362

திருவண்ணாமலை – 161

திருவாரூர் – 88

தூத்துக்குடி – 110

திருநெல்வேலி – 136

திருப்பூர் – 37

திருச்சி – 86

வேலூர் – 181

விழுப்புரம் – 91

விருதுநகர் – 180

விமான நிலைய கண்காணிப்பு

வெளிநாடு – 0

உள்நாடு – 8

ரெயில் நிலைய கண்காணிப்பு – 2

மொத்தம் – 5,834

* தற்போது 61 அரசு ஆய்வகங்கள், 70 தனியார் ஆய்வகங்கள் என 131 ஆய்வகங்கள் உள்ளன.

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52,810.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 33,60,450.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 67,492.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 3,08,649.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,834.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 986.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,86,156 பேர்/ பெண்கள் 1,22,464 பேர் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் .

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,377 பேர். பெண்கள் 2,457 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,005 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,50,680 பேர்.

* இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 118 பேர் உயிரிழந்தனர். இதில் 47 பேர் தனியார் மருத்துவமனையிலும், 71 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 5,159ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 2,350 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 107 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 11 பேர். இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top