அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்து உள்ளது

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார். அப்போது பாதுகாவலர் ஒருவர் டிரம்ப் அருகே சென்று காதில் ஏதோ ரகசியமாக கூறினார். உடனே அங்கிருந்து டிரம்ப் செய்தியாளர் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

வெளியேறிய பிறகு மீண்டும் திரும்பிய ட்ரம்ப், ‘வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு, இப்போது சூழ்நிலை கட்டுக்குள் உள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்தது, ஒருவர் மருத்துவமனைக்கு இட்டுச் செல்லப்பட்டார். சட்ட அமலாக்கத்துறையினர் தான் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுடப்பட்ட தனிநபர் ஆயுதங்களுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது, அவர்தான் சுடப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து வெள்ளை மாளிகை பூட்டப்பட்டது. ரகசிய போலீஸார் ட்ரம்பை ஓவல் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ளது வெள்ளை மாளிகை. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் என்பதால்  வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். 24 மணி நேரமும் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  இருப்பார்கள். 

இந்த சூழலில், வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர்  ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட சீக்ரெட் சர்வீஸ் எனப்படும் ரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த மர்ம நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

பென்சில்வேனியா அவென்யூவின் 17வது தெருவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. வெள்ளைமாளிகையிலிருந்து இது கொஞ்ச தூரத்தில்தான் உள்ளது.

ஆயுதத்துடன் வந்த நபரின் நோக்கம் என்ன என்பதை சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சந்தேகத்துக்குரிய நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவரது உடல்நிலை குறித்த உடனடி தகவல்கள் இல்லை.

இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட டிரம்ப், துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் பாதியில் வெளியேறினார். சிறிது நேரம் கழித்து பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப்,  வெள்ளை மாளிகைக்கு வெளியே  துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.  ஒரு நபரை தவிர வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆயுதங்களுடன் வந்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.  மருத்துவமனையில் காயம் அடைந்த நபர் சிகிச்சை பெற்று வருகிறார்” என்றார். 

இந்தச் சம்பவத்தை அடுத்து செய்தியாளர்கள் இந்தச் சம்பவத்தினால் நடுங்கி விட்டீர்களா என்று கேட்டனர், இதற்குப் பதில் அளித்த ட்ரம்ப், “எனக்குத் தெரியவில்லை. என்னைப் பார்த்தால் பயந்தது போலவா தெரிகிறது?” என்று கேட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top