4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு! மோடிக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கக் கோரி அதன் ஊழியர்கள் ட்விட்டர் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை இதுவரை மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு வழங்கவில்லை. இதனால் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் தலைதூக்கியது.

இதனையடுத்து 2019-ல் மத்திய அரசு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பிஎஸ்என்எல்-க்கு வழங்க மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இதனையடுத்தே 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்குமாறு ஊழியர்கள் சார்பாக பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 25,000த்திற்கும் மேற்பட்டோர் ட்விட்டர் வாயிலாக பிரதமரிடம் முறையிட்டுள்ளனர்.

4ஜி அலைக்கற்றை மோடி அரசு முழுமையாக தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி விட்டு, பிஎஸ்என்எல்-க்கு இதுவரை ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.இது நேரிடையாக தனியார் நிறுவனங்களுக்கு உதவி செய்வதாகும் இதற்கு மாறாக தனியார் நிறுவனங்கள் மோடிக்கு என்ன செய்யபோகிறது என்கிற கேள்வி எழுகிறது? ஒரு அரசு ,அரசு நிறுவனத்தையே நட்டத்தில் இயங்க வைக்கிறது என்றால் அது மோடியின் அரசுதான் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top