இன்று முதல் குறைவான வருமானம் வரும் வழிப்பாட்டு தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி!

இன்று [10-08-2020] திங்கள் முதல் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி எல்லைப் பகுதிகளில், 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தில் இருந்து கோயில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மத தலைவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்று முதல் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோயில்களில் நுழையும் பக்தர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாச நோய், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்சுக்கு மருந்து கண்டுப்பிடிக்காத நிலையில் கடவுள் நம்பிக்கை உள்ள மக்களுக்கு ஒரே வழி  தெய்வத்தை நினைத்து வழிபடுவதுதான்.ஆனால் இந்த கொரோனாவோ தெய்வத்தையும் விட்டு வைக்கவில்லை.சில இடங்களில் கடவுளுக்கும் மாஸ்க் போட்டு வழிபட்ட கதைகளும் சமூக வலைத்தளத்தில் வெளிவந்தது.

அந்த தெய்வத்திற்கு பூசை செய்த பூசாரிக்கும் கொரோனா வந்தது [திருப்பதி கோவில் பிரதான அர்ச்சகர் சீனிவாசன் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணமடைந்தார்] ஆகையால் தான் தமிழக அரசு பெரிய கோவிலை திறக்காமல்  10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் மட்டும் திறக்க ஆணை பிறப்பித்து இருக்கிறார்கள்.  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top