சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ பால்துரை மரணம்

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் சிறையில் கொடூரமாக அடித்து துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவத்தை தாமாக முன் வந்து மதுரை ஐகோர்ட்டு விசாரித்தது.

அதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல் நிலை காவர் முத்துராஜா உள்பட 10 போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது அரசு.

இதற்கிடையே, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே, கொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ பால்துரைக்கு கடந்த மாதம் 24-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top