கொரோனாவில் இருந்து மெல்ல விடுபடும் சென்னை;

சென்னையில் இதுவரை 1,08,124 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 94,100 பேர் குணமடைந்துவிட்டனர். 2290 பேர் மரணம் அடைந்துள்ளனர். 11,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் சித்த மருத்துவம் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு விதமான மருத்துவ முறைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதில் இன்று வரை ஒரு உயிர் இழப்புகூட நிகழவில்லை. சித்த மருவத்துவ முறையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் கடந்த ஆகஸ்ட் 8 மற்றும் 7ம் தேதிகளில் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சென்னையில் தினசரி 2,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

ஜூலை மாதத்தில் சோதனைகளை அதிகரிக்க தொடங்கியது தமிழக அரசு. இதன்படி ஜூலை மாதம் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 20.5% சதவீதமாக இருந்தது. ஜூலை இறுதியில் இந்த பாதிப்பு 9% சதவீதமாக குறைந்து. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இந்த பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் 984 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் 12,206 சோதனைகள் செய்யப்பட்டு இருந்தது. இதன்படி 8.1 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 8ம் தேதி சென்னையில் 986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. அன்றைய தினம் 14,027 பேருக்கு சோதனை செய்யப்பட்டு இருந்தது. இதன்படி சதவீதம் 7ஆக பதிவாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top