தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை; அழிவின் பாதையா?

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

6-ம் கட்ட ஊரடங்கு வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று சனிக்கிழமை மது விற்பனை அதிகரித்து உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.55 கோடிக்கும், திருச்சியில் – ரூ.41.67 கோடி, சேலத்தில் – ரூ.41.20 கோடி, கோவையில் – ரூ.39.45 கோடி, சென்னையில் – ரூ.22.56 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது.

கடந்தவார சனிக்கிழமையை விட இந்தவாரம் கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரூ.188.86 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூ.189.38 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக அணைத்து பெரும் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலகள் முடங்கின இதன் காரணமாக பொருளாதார வீழ்ச்சியில் நாடு திணறி வருகிறது. பல கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இன்னலையில் மாநில அரசுகள் கொரோனாவை சமாளிக்க நிதிகள் ஒதுக்கப்படவேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. மத்திய அரசிடம் சரியான பதில் வராததால் மாநில அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்க டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து மக்களை மேலும் அழிகிறது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top