நிவின்பாலியின் “மூத்தோன்” சர்வதேச அளவில் 3 விருதுகளை வென்றது;

கேரளா சினிமா 1980-களுக்கு பிறகு பெரும் மாற்றம் அடைந்து இன்று இந்திய திரை உலகில் சிறந்த சினிமாக்கள் உருவாகும் இடமாக மாறியுள்ளது. எதார்த்தம் நிறைந்த கதைகளையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து கொடுத்து வரும் மலையாள திரையுலகம் இன்றுவரை பல்வேறு சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வருகிறது.

இவ்வாறு தனிச் சிறப்பையும், கவனத்தையும் பெற்ற மலையாள திரையுலகில் சமீபத்தில் நிவின்பாலியின் நடிப்பில் வெளியான மூத்தோன் திரைப்படம் சென்ற ஆண்டு இறுதியில் வெளியாகி இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்ற நிலையில் தற்பொழுது உலக அளவில் மூன்று விருதுகளை பெற்று உலக ரசிகர்களின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சமீபத்தில் நியூயார்க் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் விழாவில் திரையிடப்பட்டது.

நியூயார்க் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரம் என 3 விருதுகளை வென்று கேரள சினிமாவின் பெருமையை மீண்டும் தலைநிமிர செய்துள்ளது. சர்வதேச அளவில் நிவின் பாலி பெற்ற முதல் விருது இதுவேயாகும்.

தற்பொழுது இந்திய அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவ்வாறு சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற நிவின் பாலி தன் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குனர் கீது மோகன்தாஸ்க்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உலக அரங்கில் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ள மூத்தோன் திரைப்படத்தை நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார் இவர் தமிழில் நள தமயந்தி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top