விஜயவாடா தீ விபத்து, 9 பேர் பலி: உயிரிழந்தோரின் குடும்பத்தினற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் – ஆந்திர அரசு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பணக்காரர்கள் தங்கும் சொகுசு ஓட்டல் ஒன்று கொரோனா வார்டாக மாற்றியது ஆந்திரா அரசு, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. 5 மாடி கொண்ட அந்த சொகுசு ஓட்டலில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஓட்டலில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள்அ ங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதேபோல் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top