தொடரும் சிக்கல்;இந்தியா மற்றும் சீனா இடையே மேஜர் ஜெனரல் பேச்சுவார்த்தை!

இந்தியா மற்றும் சீனா இடையே இருந்துவரும் பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை. மேஜர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது  என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

சீனாவைப்பற்றிய பிம்ம்பத்தை மக்களிடையே எதிராக நிலைநிறுத்திய பாஜக அரசு, சீன அரசோடு குஜராத் மாநில அரசு செய்திருந்த ஒப்பந்தங்களை பற்றி பேச மறுக்கிறது.மத்தியில் ஆளும் பாஜக அரசு சீனா விசயத்தில் மக்களுக்கு ஒரு முகத்தையும்,சீனாவிற்கு வேறு ஒரு முகத்தையும் காண்பித்து இன்னும் பேச்சு வார்த்தையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.     

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15ந்தேதி இரவில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.  இருதரப்பு வீரர்களும் கற்கள், கம்பிகள் மூலம் ஒருவரையொருவர் தாக்கினர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 

இந்த மோதல் காரணமாக இந்திய-சீன உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எல்லையில் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா படைகளை குவித்தது.  அதேசமயம் எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் இரு நாடுகளும் மேற்கொண்டன. அதன்படி இரு நாடுகளுக்கிடையே ராணுவ ரீதியில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன.

முதலில் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன்.  பின்னர் இரு நாடுகளின் தூதரக அளவிலான பேச்சுவார்த்தை கடந்த ஜூன் 24ந்தேதி நடத்தப்பட்டது.  இந்த பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்வது குறித்து முன்னர் ஒப்புக்கொண்ட புரிந்துணர்வை விரைவாக நடைமுறைப்படுத்துவது எல்லையில் அமைதியை உறுதிப்படுத்த உதவும் என்று இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்த நிலையில், லடாக் பிரிவில் அமைந்த இந்தியா மற்றும் சீனா நாடுகளின் எல்லைகளை பிரிக்கும் உண்மை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து சீன தரப்பில் படைகளை வாபஸ் பெறுவது பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக தவுலத் பெக் ஓல்டி பகுதியில் வைத்து, இந்தியா மற்றும் சீனா இடையே மேஜர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என ராணுவ வட்டாரங்கள் இன்று தெரிவித்து உள்ளன.

இந்த பதற்றத்தை தணிப்பதற் காக, இந்தியா – சீனா இடையேராஜாங்க ரீதியாகவும், ராணுவகமாண்டர்கள் நிலையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், கமாண்டர்கள் மட்டத்தில் 4 சுற்று பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. இதன் விளைவாக, லடாக்கின் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியது.

எனினும், இந்திய எல்லைக்கு உட்பட்ட பாங்காங் ஏரி பகுதியில் இருந்து வெளியேற சீன ராணுவம் மறுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலாக 5-ம் சுற்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதில், “பாங்காங் ஏரியில் இருந்து தங்கள் ராணுவப் படைகள் பின்வாங்க வேண்டுமெனில், இந்திய ராணுவமும் அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்” என சீனா நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது.

ஆனால், பாங்காங் ஏரியில் இருந்து படைகளை விலக்கி கொள்வதற்கான பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், பாங்காங் ஏரியில் ராணுவம் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபடும் எனவும் இந்தியா கூறியுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்தியா – சீனா இடையேயான 5-ம் சுற்று பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top