தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு – பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு!

தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய கோரிக்கையை பரிசீலிக்க மத்திய, மாநில அரசுகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


சென்னை ஐகோர்ட்டில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவைகளுக்கு தேர்தல் நடத்தும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும். பெண்கள், எஸ்.சி., எஸ்.டி, பிரிவினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும். இதுகுறித்து கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தலில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். பின்னர், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top