கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்தனர்.

கேரளாவில் சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், பலத்த மழைக்கு மத்தியில் விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று பிற்பகல் கோழிக்கோட்டுக்கு நேரில் வந்து விபத்துக்குள்ளான பகுதியை பார்வையிடவுள்ளார். நேற்றே அவர் இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டார்.

தேசிய விமான கண்காணிப்புக் குழுவான டி.ஜி.சி.ஏ. ஏற்கனவே விமானவிபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறிய வாய்ப்பு உள்ளது.

விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடலை பதிவு செய்த CVR கருவியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏதும் கோளாறு ஏற்பட்டிருந்ததா என்பது கருப்பு பெட்டியில் பதிவான தரவுகளின் அடிப்படையில் தெரிய வரும். விபத்துக்கு முன்பு பதிவான அனைத்து தரவுகளை கருப்பு பெட்டி பதிவு செய்து வைத்திருக்கும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top